பொது

தலைவர்கள் மக்களை மறக்கவோ தொந்தரவு செய்யவோ கூடாது - பிரதமர்

29/01/2023 05:12 PM

சிம்மோர், 29 ஜனவரி  (பெர்னாமா) -- தலைமைத்துவத்தை ஏற்றப் பின்னர், அனைத்து தலைவர்களும் மக்களை மறக்கவோ தொந்தரவு செய்யவோ கூடாது.

மாறாக, மக்களுக்கு உதவவும் அவர்களின் நலன்களுக்காகப் போராடவும் தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களைத் தலைவர்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நினைவுறுத்தியுள்ளார்.

பேராக், செம்மோர், கிளேபாங் தமிழ்ப்பள்ளியில் இன்று நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டு பேசியபோது டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அவ்வாறு தெரிவித்தார்.

அதே நிகழ்ச்சில், எம்.ஜி.ஆரின் 'நான் ஆணையிட்டால்' பாடலையும் பிரதமர் பாடியிருக்கின்றார்.

முன்னதாக, அவர் பொங்கல் பானையில் பால் ஊற்றி இந்த பொங்கல் நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)