உலகம்

லிமாவில் கலகத் தடுப்பு போலீசாருடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் கைகலப்பு

29/01/2023 06:15 PM

லிமா, 29 ஜனவரி  (பெர்னாமா) -- பெரு நாட்டுத் தலைநகர் லிமாவில் கலகத் தடுப்பு போலீசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே கைகலப்பு மூண்டது.

அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நேற்று சனிக்கிழமையும் தொடர்ந்தபோது, இக்கைகலப்பு நிகழ்ந்தது.

கலகத் தடுப்பு போலீசாரை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் பொருட்களை வீசினர்.

அதனைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி அவர்கள் கண்ணீர் புகை குண்டுகளைப் பாய்ச்சினர்.

அதில், ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர் காயமுற்றார்

இந்நிலையில், அரசியல் அமைதின்மை மற்றும் சமூகப் பிரச்னைகளுக்கு மத்தியில், அதிபர் தேர்தல் நடத்தப்படுவதை துரிதப்படுத்துவதை காங்கிரஸ் மறுப்பதாக, அந்நாட்டு அதிபர் தீனா பொலுவேட் குற்றஞ்சாட்டினார்.

தம்மை பதவி விலகக்கோரும் ஆர்ப்பாட்டங்கள் வலுத்து வருவதால், அதற்குத் தீர்வு காணும் முயற்சியாக அதிபர் தேர்தல் விரைந்து நடத்தப்பட வேண்டும் என்று அவர் தொடர்ந்து கோரிவருகிறார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)