கோலாலம்பூர், 28 மே (பெர்னாமா) -- உள்ளூர் தேவைக்கான கோழி விநியோகிப்பு பற்றாக்குறையைச் சமாளிக்க, வரும் ஜூன் முதலாம் தேதி முதல் கோழி ஏற்றுமதியை நிறுத்தியிருக்கும் அரசாங்கத்தின் முடிவு சிறந்த நடவடிக்கையாகும்.
அந்நடவடிக்கை போதுமான உள்நாட்டு கோழி விநியோகத்தை உறுதி செய்வதோடு, நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களின் விநியோகத்தை அதிகரிக்கவும் உதவும் என்று,விவசாயம் மற்றும் உணவு தொழிற்துறை அமைச்சு, மாஃபியின் தலைமைச் செயலாளர் டத்தோ அஸ்லினா அப்துல் அப்துல் ஹமிட் தெரிவித்தார்.
இந்த ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரையில், மலேசியாவின் சராசரி கோழி தேவை மாதத்திற்கு 5 கோடியே 40 லட்சம் கோழிகள், அதாவது ஒரு நாளைக்கு 11 லட்சம் கோழிகள் என்று மாஃபியின் தரவுகள் காட்டுவதாக அஸ்லினா விவரித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)
© 2022 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை