உலகம்

மேற்கு வங்க ரயில் விபத்தில் எண்மர் பலி

இந்தியா, 17 ஜூன் (பெர்னாமா) -- மேற்கு வங்கத்தில் சரக்கு ரயில் ஒன்று பயணிகள் ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் எண்மர் உயிரிழந்தனர்.

மேலும், குறைந்தது 25 பேர் காயத்திற்கு ஆளாகினர்

டார்ஜீலிங் மாவட்டத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் மூவர், ரயில் நிலைய ஊழியர்கள் ஆவர்.

சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் நடந்து வரும் வேளையில், அங்கு மக்கள் கூட்டம் கூடியது.

சரக்கு ரயிலின் ஓட்டுநர் சாலை விதிமுறையைப் புறக்கணித்ததால் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தின்போது, பயணிகள் ரயிலின் பின்பகுதியில் உள்ள நான்கு பெட்டிகள் தடம் புரண்டன.

ரயில் பாதுகாப்பை மேம்படுத்த அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், இந்தியாவில் தொடர்ந்து நூற்றுக்கணக்கான விபத்துகள் ஆண்டுதோறும் நிகழ்கின்றன.

[ read more ]
news.php ago
 MORE NEWS
 பரிந்துரை