பொது

நாடு தழுவிய அளவில் தியாகத் திருநாள் ஒரு கண்ணோட்டம்

கோலாலம்பூர், 17 ஜூன் (பெர்னாமா) -- நாடு தழுவிய அளவில், இஸ்லாமியர்கள் தியாகத் திருநாளை சிறப்பாகக் கொண்டாடும் வேளையில், கோலாலம்பூரில் உள்ள தேசிய பள்ளிவாசலில் அதன் முதன்மை இமாம், எஹ்சான் முஹமட் ஹுஸ்னி முன்னிலையில் நடைபெற்ற தியாகத் திருநாள் தொழுகையில், உள்நாட்டவர் மட்டுமின்றி அதிகமான வெளிநாட்டினரும் கலந்து கொண்டனர்.

ஜோகூர் மாநிலத்தில் இடைக்கால சுல்தானாகிய துங்கு மஹ்கோத்தா இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம், இன்று காலையில் ஜோகூர் பாருவில் உள்ள ஜாமெக் பசார் பெலாஙி பள்ளிவாசலில் தியாகத் திருநாள் சிறப்புத் தொகையில் கலந்து கொண்டார்.

அவருடன், அவரின் உடன்பிறப்புகள், ஜோகூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஓன் ஹபிஸ் காஸி, அம்மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள், அரசாங்க மூத்த அதிகாரிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அத்தொழுகையில் கலந்து கொண்டனர்.

பேராக் மாநில சுல்தான், சுல்தான் நஸ்ரின் முய்சுட்டின் ஷா , இன்று காலை சுமார் 800 பேருடன் சுல்தான் அஸ்லான் ஷா பள்ளிவாசலில் தியாகத் திருநாள் தொழுகையை மேற்கொண்டார்.

பினாங்கில் உள்ள மாநில பள்ளிவாசலில் அம்மாநில ஆளுநர் துன் அஹ்மட் ஃபுஸி அப்துல் ரசாக், 2,000கும் மேற்பட்டோருடன் தியாகத் திருநாள் தொழுகையில் கலந்து கொண்டார்.

தமது துணைவியார் தோ புவான் கடிஜா முஹமட் நோருடன் காலை மணி 8.15க்கு சம்பந்தப்பட்ட பள்ளிவாசலை வந்தடைந்த அவர்களை மாநில முதலாவது துணை முதலமைச்சர் டத்தோ டாக்டர் முஹமட் அப்துல் ஹமிட் வரவேற்றார்.

கோலா திரெங்கானுவுக்கு அருகிலுள்ள கம்போங் பங்கோல் செம்பெடாக் குடியிருப்பு மக்கள் இன்று காலை பங்கோல் செம்பெடாக் சதுக்கத்தில் தங்களின் தொழுகையை மேற்கொண்டனர்.

சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்தத் தொழுகைக்குப் பின்னர் அவர்களுக்கு சுவையான உணவும் பரிமாறப்பட்டது.

சரவாக மாநில ஆளுநர் துன் டாக்டர் வான் ஜுனாய்டி துவாங்கு ஜஃபார், அவரின் துணைவியார் தோ புவான் ஃபௌசியா முஹமட் சனுசி, அம்மாநில முதலமைச்சர் டான் ஶ்ரீ அபாங் ஜொஹாரி துன் ஓபெங், அவரின் துணைவியார் புவான் ஶ்ரீ ஜுமானி துவாங்கு பூஜாங் ஆகியோர் கூச்சிங்கில் உள்ள ஜாமேக் பள்ளிவாசலில் நடைபெற்ற தியாகத் திருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர்.

[ read more ]
16m ago
 MORE NEWS
 பரிந்துரை