புத்ராஜெயா, 28 மே (பெர்னாமா) -- 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி ஜூன் 9-ஆம் தேதி வரையில் பணிக்கு அமர்த்தப்பட்ட சி.ஓ.எஸ் (COS) எனப்படும், சேவை ஒப்பந்த ஆசிரியர்களின் ஒப்பந்தக் காலத்தை நீட்டிக்க, கல்வி சேவை ஆணையம், எஸ்.பி.பி. இணக்கம் தெரிவித்துள்ளது.
எஸ்.பி.பி.-யின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட ஆசிரியர்களாக அவர்களை நியமிப்பது தொடர்பான செயல்முறைக்கு, அந்த ஒப்பந்தக் கால நீட்டிப்பு வழிவகுக்கும் என்று, கல்வி அமைச்சர் டத்தோ டாக்டர் ரட்சி ஜிடின் தெரிவித்தார்.
COS எனப்படும் ஒப்பந்த சேவை ஆசிரியர்கள் திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்ட 2,600 ஆசிரியர்களின் ஒப்பந்தக் காலம் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டு, அவர்களின் நலன் காக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாக கடந்த மே 5-ஆம் தேதி டாக்டர் ரட்சி ஜிடின்அறிவித்தார்.
2021-ஆம் ஆண்டுக்கான ஒரே முறை அடிப்படையிலான சிறப்பு ஆட்சேர்ப்பு நடவடிக்கையில், டிஜி41 கல்வி அதிகாரிகளை நியமிக்கும் ஒப்பந்த சேவை ஆசிரியர்களுக்கான நேர்காணல் முடிவை, நேற்று வெள்ளிக்கிழமை எஸ்.பி.பி அறிவித்ததாக அவர் கூறினார்.
விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் முடிவுகளை எஸ்.பி.பி-யின் இணையத்தளம், www.spp.gov.my என்ற இணைப்பில் சரிபார்க்கலாம்.
வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்களின் பணியமர்வை கல்வி அமைச்சு மேற்கொள்ளும் என்றும் டாக்டர் ரட்சி தெரிவித்தா
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)
© 2022 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை