தோக்கியோ, 28 மே (பெர்னாமா) -- இருவழி உறவுகளை மேலும் விரிவான நிலைக்கு மேம்படுத்துவதற்கு மலேசியாவும் ஜப்பானும் ஒப்புக் கொண்டுள்ளன.
அதோடு, எரிசக்தி, விவேக நகரங்கள், சுற்றுச் சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகிய துறைகளிலும் புதிய ஒத்துழைப்பை உருவாக்கி, கிழக்கு நோக்கிய கொள்கையைத் தொடர்வதற்கும் இரு நாடுகளுக்கு இடையில் இணக்கம் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மலேசியா-ஜப்பான் உறவுகளை ஒரு விரிவான வியூக கூட்டாண்மைக்கு மேம்படுத்துவதோடு கிழக்கு நோக்கிய கொள்கைத் தொடர வேண்டும் என்று, வெள்ளிக்கிழமை ஜப்பானிய பிரதமர், ஃபுமியோ கிஷிடாவை சந்தித்தபோது தாம் பரிந்துரைத்ததாக பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
தமது அதிகாரப்பூர்வ அலுவல் பயணம் வெற்றிகரமாக முடிந்ததாக கூறிய அவர், மலேசியா-ஜப்பான் உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக மேலும் பேச்சுவார்த்தை நடத்த தாமும் கிஷிடாவும் ஒப்புக்கொண்டதாகவும் குறிப்பிட்டார்.
சனிக்கிழமை தோக்கியோவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இஸ்மாயில் சப்ரி அவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)
© 2022 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை