அரசியல்

சிங்கப்பூருக்கு 'விரைவில்' வருகை புரியுமாறு அன்வாருக்கு சிங்கை பிரதமர் அழைப்பு

25/11/2022 03:37 PM

கோலாலம்பூர், 25 நவம்பர் (பெர்னாமா) -- நாட்டின் 10-வது பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கும் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் வாழ்த்துக் கூறியிருக்கின்றார்.

அதோடு, சிங்கப்பூருக்கும் "விரைவில்" வருகை புரியுமாறும் அன்வாருக்கு அவர் அழைப்பு விடுத்திருக்கின்றார்.

சிங்கப்பூருக்கு விரைவில் வருகைப் புரியுமாறு டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு தாம் அழைப்பு விடுப்பதாகவும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த அன்வாருடன் மலேசியாவின் புதிய அரசாங்கத்துடனும் ஒத்துழைக்க முடியும் என்று தாம் நம்புவதாகவும் லீ சியன் லூங் தெரிவித்தார்.

அன்வாருடன் இன்று தாம் பேசியதாகக் கூறிய அவர், அவருக்கு தாம் வாழ்த்துக் கூறியதாக தமது முகநூலில் லீ பதிவிட்டிருக்கின்றார்.

"அன்வாரை பல ஆண்டுகளாக எனக்குத் தெரியும். நாங்கள் ஆகக் கடைசியாக கடந்த 2018-ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் சந்தித்தோம்" என்று அவர் கூறினார்.

2018-ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் நடந்த உச்சநிலை மாநாட்டில் மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான இருவழி உறவுகளின் நலன்கள் குறித்து அன்வார் உரையாற்றும்போது சிங்கப்பூரில் ஆகக் கடைசியான் அவரை நான் சந்தித்தேன்" என்று லீ தெரிவித்தார்.

அச்சந்திப்பின்போது எடுத்துக் கொண்ட ஒரு புகைப் படத்தையும் லீ பதிவேற்றம் செய்திருந்தார்.

நீண்ட காலமாக அனுசரிக்கப்பட்டு வரும் முக்கியமான தொடர்பை மலேசியாவும் சிங்கப்பூரும் பகிர்ந்து கொண்டதாகவும் அவர் கூறினார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)