GE15 NEWS |
கோலாலம்பூர், 26 நவம்பர் (பெர்னாமா) -- ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் கீழ் மத்திய அரசுக்கும் சரவாக் மாநிலத்திற்கும் இடையிலான உறவு பரிட்சயம் நிறைந்தது மட்டுமின்றி வலுவானதாகவும் இருக்கும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கைத் தெரிவித்தார்.
சரவாக் கூட்டணி கட்சி, GPS தலைவரும் அம்மாநில முதல்வருமான டான் ஶ்ரீ அபாங் ஜொஹாரி துன் ஓபெங் சில முக்கிய பேராளர்களுடன் இன்று தமது இல்லத்திற்கு வருகை அளித்ததைத் தொடர்ந்து அன்வார் தமது முகநூல் மற்றும் டுவிட்டர் பதிவில் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
தாம் தலைமையேற்கும் ஒருமைப்பாட்டு அரசாங்கத்தில், தேசிய முன்னணி, வாரிசான் மற்றும் சபா மக்கள் கூட்டணி, GRS-ஐ தவிர்த்து, GPS கட்சியும் முக்கிய பங்காற்றுவதாக டத்தோ ஶ்ரீ அன்வார் தமது பதிவில் தெரிவித்தார்.
GPS கூட்டணியில், PESAKA BUMIPUTERA BERSATU, PBB கட்சி, SARAWAK UNITED PEOPLE'S கட்சி, SUPP, சரவாக் மக்கள் கட்சி, PRS மற்றும் PROGRESSIVE DEMOKRATIK கட்சி, PDP ஆகிய கட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
15-வது பொதுத் தேர்தலில், அக்கூட்டணி போட்டியிட்ட 31 நாடாளுமன்றத் தொகுதிகளில் 23-இல் வெற்றி பெற்றது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)
© 2023 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை