GE15 NEWS |
கட்டார், 07 டிசம்பர் (பெர்னாமா) -- 2022-ஆம் ஆண்டு உலக கிண்ண காற்பந்து போட்டியில் இருந்து ஸ்பெயின் விடைபெற்று கொண்டது.
எடுகேஷன் சிட்டி அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில், 2010-ஆம் ஆண்டு வெற்றியாளரான ஸ்பெயின் மொரொக்கோவிடம் தோல்வி கண்டது.
நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்பெயின் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், கோல் அடிப்பதில் இரு நாடுகளும் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
முழு நேர ஆட்டம் கோல்கள் இன்றி முடிவடைய கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.
கூடுதலாக வழங்கப்பட்ட 30 நிமிடங்களில் இரு அணிகளும் கோல் அடிக்க தவறியதால், காலிறுதிக்கு தேர்வாகும் குழுவை தீர்மானிக்க பினால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது.
அதில் 3-0 என்ற கோல்கள் எண்ணிக்கையில் மொரொக்கோ வெற்றி பெற்று முதல் முறையாக காலிறுதி சுற்றுக்கு தேர்வாகியது.
பினால்டி மூலம் தோல்வி கண்டு உலக கிண்ண காற்பந்து போட்டியில் இருந்து ஸ்பெயின் விடைபெறுவது இது நான்காவது முறையாகும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)
© 2023 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை