பொது

காசாவிற்குள் நுழையும் மனிதாபிமான உதவிகள், பிப்ரவரியில் 50 விழுக்காடு குறைவு

27/02/2024 09:07 PM

கோலாலம்பூர், 27 பிப்ரவரி (பெர்னாமா) -- இம்மாதம் காசாவிற்குள் நுழையும் மனிதாபிமான உதவிகளை ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 50 விழுக்காடு குறைந்துள்ளதாக பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் வேலை மற்றும் உதவி நிறுவனம் UNRWA தெரிவித்துள்ளது.

மோசமான வாழ்க்கை சூழலை எதிர்நோக்கி வரும் 20 லட்சம் பாலஸ்தீனியர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய உதவிகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று UNRWA ஆணையர், பிலிப் லாஸரினி கூறினார்.

நிலையற்ற அரசியல், எல்லைப் பகுதிகளை அவ்வப்போது மூடுவது, இராணுவ நடவடிக்கைகளில் பாதுகாப்பு இல்லாதது, பொது அமைதி சீர்குலைவு ஆகியவையே உதவிகள் வழங்குவதில் இடையூறாக உள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.

போர் நிறுத்தம், உயிரை பாதுகாக்கும் உதவி மற்றும் வணிகப் பொருட்களை அனுமதிக்கும் வகையில் முற்றுகையை நீக்குவது போன்ற நடவடிக்கைகளை நீண்ட காலத்திற்கு முன்பே செய்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)