தேசிய தணிக்கைத் துறை அறிக்கை; நாடாளுமன்றத்தில் பரிந்துரைகளை வழங்கலாம்

04/07/2024 06:03 PM

கோலாலம்பூர், 04 ஜூலை (பெர்னாமா) -- 2024-ஆம் ஆண்டு தேசிய தணிக்கைத் துறையின் அறிக்கையை மக்களவையில் விவாதம் செய்ய அனுமதித்த முடிவு நாட்டின் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை ஏற்பதற்கும் அரசாங்கம் தயாராக இருப்பதைக் காட்டுகிறது.

அடுத்த வாரம் மக்களவை அமர்வில் அந்த அறிக்கைக் குறித்து விவாதம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதன் தொடர்பான பிரச்சனைகளை விவாதிக்கவும், குறிப்பிட்ட அமைச்சுகள், துறைகள் மற்றும் நிறுவனங்களின் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்கவும் அனுமதிக்கும் என்று தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

''ஆக்கப்பூர்வமான விமர்சனங்களைப் பெறும் அரசாங்கத்தின் வெளிப்படையான தன்மை அடுத்த வாரம் நடைபெறவுள்ள விவாதத்தில் பிரதிபலிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். நாங்கள் விமர்சனங்களைப் பெறுவதற்குத் தயாராக இருக்கிறோம். ஆனால் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையோ அவதூறுகளையோ பரப்ப வேண்டாம். கருத்து தெரிவிக்க உரிமை உண்டு ஆனால் அவதூறு மற்றும் பொய்யான தகவல்களைப் பரப்ப உரிமை இல்லை,'' என்றார் அவர். 

11 அமைச்சுகளை உட்படுத்தி நான்காயிரத்து 197 கோடி ரிங்கிட் மதிப்புள்ள தணிக்கை அறிக்கை இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]