அரசியல்

சுங்கை பாக்காப் இடைத்தேர்தல்;பிரச்சாரத்தில் பல்வேறு குற்றங்களை உட்படுத்தி 4 போலீஸ் புகார்கள்

04/07/2024 06:46 PM

நிபோங் திபால், 04 ஜூலை (பெர்னாமா) -- சுங்கை பாக்காப் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு இன்னும் இரு நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில், தேர்தல் பிரச்சார காலம் முழுவதும் பல்வேறு குற்றங்களை உட்படுத்தி நான்கு போலீஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளன.

அந்த நான்கு புகார்களில், இரு புகார்கள் 1954-ஆம் ஆண்டு தேர்தல் குற்றச் சட்டம் செக்‌ஷன் 4A உட்பிரிவு ஒன்றின் கீழ் விசாரிக்கப்படுவதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் தெரிவித்தார்.

வியாழக்கிழமை, நம்பிக்கை கூட்டணி ஏற்பாடு செய்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் அவ்வாறு கூறினார்.

ஜூன் 22-ஆம் தேதி தொடங்கிய தேர்தல் பிரச்சாரத்திற்காக சுமார் 153 பெர்மிட்டுகளுக்கு போலீஸ் அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

"தற்போது, ​​வாக்களிக்கும் நாள் வரை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போலீஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை 835 பேர்," என்று அவர் தெரிவித்தார்.

தேர்தலுக்கு இடையூறு விளைக்கும் விதமாக எந்தவொரு அசம்பாவிதமும் பதிவு செய்யப்படவில்லை என்றும் கெஅடிலானின் பொது செயலாளருமான சைஃபுடின் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)