உலகம்

இந்தோனேசியாவில் 51,000 ஆண்டுகள் பழமையான குகை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

04/07/2024 06:52 PM

பாரிஸ், 04 ஜூலை (பெர்னாமா) -- காட்டுப் பன்றியுடன் மூன்று மனிதர்கள் இருக்கும் இந்த ஓவியத்தைப் பார்ப்பதற்குச் சாதாரணமான தெரியலாம்.

ஆனால், இந்த சுவர் ஓவியத்திற்கு வயது 51,000 ஆண்டுகள் ஆகும்.

இந்தோனேசியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஓவியம் ஆதி காலத்து மனிதர்களால் தீட்டப்பட்டதாகவும்.

2019-ஆம் ஆண்டு, இந்தோனேசியாவில் உள்ள குகை ஒன்றில் 44,000 ஆண்டுகள் பழமையான சுவரோவியம் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆஸ்திரேலியாவின் கிரிஃபித் பல்கலைக்கழக தொல்பொருள் ஆய்வாளர் மாக்சிம் ஆபர்ட் கூறுகிறார்.

ஆனால், அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஓவியம், இன்னும் பழமையானது என்றும் ஆதிகாலத்து மனிதர்களின் வாழ்வியலைச் சித்தரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

''பண்டைய காலத்து மனிதர்கள் கலை மூலம் கதைகளைச் சொல்லும் திறன் கொண்டவர்கள் என்பதை இது (ஓவியம்) புலப்படுத்துகிறது. 

''இது மனித அறிவாற்றல் பரிணாமத்தைப் பற்றிய நமது புரிதலை மாற்றியமைக்கலாம்,'' என்று அவர் குறிப்பிட்டார்.

சுமார் 65,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியா செல்வதற்கு முன்பு தென்கிழக்கு ஆசியா வழியாகச் சென்ற முதல் மனிதக் குழுவால் இந்த ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்கலாம் என்று  ஆபர்ட் ஊகிக்கிறார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)