உலகம்

இங்கிலாந்தில் இன்று பொது தேர்தல்

04/07/2024 07:02 PM

லண்டன், 04 ஜூலை (பெர்னாமா) -- இங்கிலாந்தின் புதிய அரசாங்கத்தைத் தேர்வு செய்வதற்கான வாக்களிப்பு இன்று நடைபெறுகிறது.

இந்தப் பொது தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பு மையங்கள் காலையிலேயே திறக்கப்பட்டன.

வட லண்டனில் உள்ள மக்கள் வாக்களிக்க காலையிலேயே வாக்களிப்பு மையங்களில் கூடியுள்ளனர்.

மந்தமான பொருளாதார வளர்ச்சி, நிறுவனங்கள் மீதான நம்பிக்கை குறைந்து வருவது மற்றும் மோசமடைந்து சமூக கட்டமைப்பு போன்றவற்றினால் இத்தேர்தலில் கேர் ஸ்டார்மெர் தலைமையிலான தொழிலாளா் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பிரதமா் ரிஷி சுனக் தலைமையிலான கன்சா்வேட்டிவ் கட்சி இந்தத் தோ்தலில் மிகப் பெரிய தோல்வியைச் சந்திக்கும் என்று கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன.

இங்கிலாந்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்யவிருப்பவரைத் தீர்மானிக்கும் இந்தத் தோ்தலில் 650 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு வாக்களிப்பு நடைபெறுகிறது.

கடந்தாண்டில் நாடாளுமன்றத் தொகுதி எல்லைகள் திருத்தியமைக்கப்பட்டதோடு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேறியப் பின்னர் பிறகு நடைபெறும் முதல் பொதுத் தோ்தல் இதுவாகும்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]