பொது

கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை பொதுப்பணித்துறை கண்காணிக்கும்

04/07/2024 07:24 PM

கோலாலம்பூர், 04 ஜூலை (பெர்னாமா) -- ஜூன் மாதத்தில் டீசலுக்கான உதவித் தொகை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, கட்டுமானத் துறையில் பொருட்களின் விலையேற்றம் தொடர்பில் ஏற்படும் விவகாரங்களை, குறிப்பாக கட்டுமானப் பொருட்கள் மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு குறித்து, பொதுப்பணி துறை கூர்ந்து கண்காணித்து வருகிறது.

இது கட்டுமானத் துறையில் சாத்தியமான தாக்கம் இருந்தாலும், செலவு அதிகரிப்பின் அளவை மதிப்பிடுவதற்கு இன்னும் தாமதமாகவில்லை என்று பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறினார்.

“அரசாங்கம் தற்போது இந்த சிக்கலை ஆய்வு செய்து வருகிறது. எந்தவொரு கொள்கையையும் பரிசீலிக்கும் அல்லது செயல்படுத்துவதற்கு முன், கட்டுமான செலவினங்களில் ஏற்ற இறக்கங்களைக் கண்காணிக்கும் மலேசிய புள்ளியியல் துறையால் வழங்கப்பட்ட பொருள் செலவு குறியீட்டை பகுப்பாய்வு செய்வது உட்பட விரிவான அலசலை மேற்கொள்ளும்,” என்று இன்று மக்களவையில் கேள்வி நேர அங்கத்தின் போது அவர் கூறினார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)