உலகம்

ஜாமாய்க்காவில் பெரில் சூறாவளி

04/07/2024 07:17 PM

ஜமாய்க்கா, 04 ஜூலை (பெர்னாமா) -- பெரில் சூறாவளி ஜாமாய்க்காவை நோக்கி வீசி வருகிறது.

தற்போது, இச்சூறாவளியினால் பலத்த காற்றும் கனமழையும் அத்தீவைத் தாக்கியுள்ளது.

அந்த சக்திவாய்ந்த புயலினால் ப்முன்னதாக அறுவர் உயிரிழந்த வேளையில், தென்கிழக்கு கெரிபியனில் குறிப்பிடத்தக்க சேதத்தையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில், அவசரநிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறவில்லை.

சூறாவளியின் தாக்கத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, ஜமாய்க்கா பேரிடர் மண்டலமாக அறிவிக்கப்பட்டதால் அத்தீவு அவசரநிலைக்கு உட்படுத்தப்பட்டது.

முன்னதாக முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஜமாய்க்கா தலைநகரான கிங்ஸ்டனி மீனவர்கள் தங்கள் படகுகளை தண்ணீரிலிருந்து வெளியேற்றியதோடு தொழிலாளர்கள் வீசும் பலத்த காற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சாலையோர விளம்பரப் பலகைகளை அகற்றியுள்ளனர்.

மேலும், அங்குள்ள மக்கள் சிலர் தண்ணீர் மற்றும் உணவை சேமித்து வைத்ததாக தெரிவித்துள்ளனர்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]