உலகம்

வட கலிஃபோர்னியாவில் காட்டுத் தீ; 26,000 குடியிருப்பாளர்கள் இடமாற்றம்

04/07/2024 07:28 PM

வட கலிஃபோர்னியா, 04 ஜூலை (பெர்னாமா) -- வட கலிஃபோர்னியாவில் அதிகரித்து வரும் காட்டுத்தீயினால் அங்குள்ள சுமார் 26,000 குடியிருப்பாளர்கள் வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதைத் தொடர்ந்து, அச்சமூகத்தினர் இன்று கொண்டாடவிருந்த வானவெடிக்கை கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டது.

மேலும், தீப்பிழம்புகள் வீட்டுக்குள் செல்லாமல் தடுக்கும் வண்ணமாக நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்புப் படையினர் கடும் வெப்பத்தில் பணியாற்றினர்.

Sacramento-விலிருந்து வடக்கே சுமார் 110 கிலோமீட்டர் தொலைவு வரை, Butte County-இல் உள்ள Oroville நகருக்கு அருகில் தீ பரவியுள்ளது.

சுமார் 14 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கும் மேலாக தீயின் கரும்புகை பரவியது.

எனினும், புதன்கிழமை நிலவரப்படி, தீ பரவும் நடவடிக்கைகள் குறைந்துள்ளதாகக் கூறிய Oroville மேயர் டேவிட் பிட்மென், இதனால் சில குடியிருப்பாளர்கள் மீண்டும் தங்களின் வீட்டிற்குத் திரும்புவர் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தீ பரவுவது தென்பகுதியில் குறைந்துள்ளதால், அங்குப் பணிபுரியும் தீயணைப்பு வீரர்கள் வடக்குப் பகுதியில் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)