பொது

கே.எல்.ஐ.ஏ-வில் எரிவாயு கசிவு; காரணத்தைக் கண்டறிகிறது தீயணைப்பு, மீட்புத் துறை

04/07/2024 07:45 PM

சிப்பாங், 04 ஜூலை (பெர்னாமா) -- கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், கே.எல்.ஐ.ஏ-வின் சிப்பாங் பொறியியல் ஆதரவு தென் மண்டலத்தில் இன்று எரிவாயு கசிவு ஏற்பட்டதற்கான காரணத்தை தீயணைப்பு, மீட்புத் துறை கண்டறிந்து வருகிறது. 

அப்பகுதிக்குச் செல்லும் பல சாலைகள் பொதுமக்களுக்கு மூடப்பட்டுள்ள நிலையில் சோதனை மையம் இடர் கட்டுப்பாட்டுப் பகுதியாக திறக்கப்பட்டுள்ளது பெர்னாமா மேற்கொண்ட கண்ணோட்டத்தில் தெரிய வந்துள்ளது. 

'மெட்டனா' (metana) வாயு என நம்பப்படும் எரிவாயு கசிவு சம்பவம் இன்று காலை ஏற்பட்டிருக்கும் என்று நம்பப்படுகிறது. 

இச்சம்பவம் தொடர்பில் MERS 999 மூலம் தமது தரப்பிற்கு காலை மணி 11.23-க்கு அவசர அழைப்பு கிடைத்ததாக, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் மலேசிய தீயணைப்பு, மீட்புத் துறையின் சிலாங்கூர் மாநில இயக்குநர் வான் முஹமட் ரசாலி வான் இஸ்மாயில் தெரிவித்தார். 

அதனைத் தொடர்ந்து, கே.எல்.ஐ.ஏ, ஷா ஆலம் தீயணைப்பு, மீட்பு நிலையங்கள், அபாயகரமான இரசாயனங்கள் சிறப்புக் குழு, HAZMAT மற்றும் நெகிரி செம்பிலான் தீயணைப்பு, மீட்புத் துறையைச் சேர்ந்த 23 அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]