பொது

பேருந்து ஓட்டுநர்களுக்கான அங்கீகார அட்டை; போக்குவரத்து அமைச்சு ஆய்வு செய்கின்றது

04/07/2024 07:57 PM

புத்ராஜெயா, 04 ஜூலை (பெர்னாமா) -- பேருந்து ஓட்டுநர்களுக்கான அங்கீகார அட்டைகளை வழங்குவது தொடர்பான சில விதிமுறைகளை போக்குவரத்து அமைச்சும் ஆராய்ந்து வருகிறது.

சம்பந்தப்பட்ட அட்டை குறித்து தமது தரப்பு ஒப்புக்கொண்ட நிலையில் சில விவகாரங்கள் மேம்படுத்தபட வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

''இந்த விவகாரம் சில மாதங்களுக்கு முன்பு தங்களிடம் எழுப்பப்பட்டது. கொள்கையளவில் இந்த அட்டையை அறிமுகப்படுத்த நாங்கள் ஒப்புக்கொள்கிறோம், ஆனால், சில அது விதிகளுக்கு உட்பட்டது,'' என்றார் அவர்.

தற்போது, ​​ஓட்டுநர் அட்டையின் விவரங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் இந்த அட்டை வழங்குவது தொடர்பான சில விதிமுறைகளை தாங்கள் ஆய்வு செய்வதாக இன்று தேசிய கப்பல் மற்றும் துறைமுக ஆலோசனை கூட்டத்திற்கு தலைமையேற்ற பின்னர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)