விளையாட்டு

கோபா அமெரிக்கா: அரையிறுதிக்கு முன்னேறியது அர்ஜெண்டினா

05/07/2024 07:49 PM

அரிசோனா, 05 ஜூலை (பெர்னாமா) -- கோபா அமெரிக்க கிண்ண காற்பந்து போட்டியின் அரையிறுதி ஆட்டத்திற்கு அர்ஜெண்டினா முன்னேறியது.  

இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் 4-2 எனும் கோல்களில், பினால்டி வாய்ப்பின் வழி, இக்குவடோரை வீழ்த்தி, அர்ஜெண்டினா வெற்றிக் கண்டது. 

இன்று காலை நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினாவும் - இக்குவாடோரும் மோதின.

ஆட்டம் தொடங்கிய 35-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா அதன் முதல் கோலைப் போட்டதோடு, முதல் பாதி 1-0 என்ற நிலையில் நிறைவடைந்தது. 

இரண்டாம் பாதியில், இக்குவடோர் கோல் அடிக்க முயற்சித்த வேளையில், எதுவும் பலனின்றி தோல்வியானது. 

பின்னர், இறுதி நிமிடத்தில் இக்குவடோர் ஒரு கோல் அடிக்க ஆட்டம், 1-1 என்று சமநிலையானது. 

வெற்றியாளரை நிர்ணயிக்க பினால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. 

அதில் 4-2 என்ற நிலையில் வெற்றிக் கண்ட அர்ஜெண்டினா  அரையிறுதி ஆட்டத்தில் வெனிசுலா அல்லது கனடாவைச் சந்திக்கும். 

-- பெர்னாமா 

 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)