விளையாட்டு

இலக்கை நோக்கி பயணிக்கிறார் ஷெரின் செம்சன்

05/07/2024 07:58 PM

அரிசோனா, 05 ஜூலை (பெர்னாமா) -- திடல்தட வீராங்கனையான ஷெரின் செம்சன் வல்லபோய் அமெரிக்கா திரும்பியதும், 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் பயிற்சி பெற விரும்புகிறார்.

அமெரிக்காவில் உள்ள வினோனா ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் அவர், இது குறித்து முன்னரே தமது பயிற்றுநருடன் விவாதித்தாக கூறினார்.

இந்தப் பருவம் முடிவதற்குள் அமெரிக்காவில் பல போட்டிகளில் பங்கேற்பதற்கு தமது பயிற்றுநருடன் இணைந்து தாம் தயார் செய்து வருவதாக அவர் கூறினார்.

மேலும், தமது சிறந்த சாதனையை புதுப்பிப்பதையும் அவர் இலக்குக் கொண்டுள்ளார்.

26 வயதான அவர், பாரிசில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கிற்கு 'wild card' டிக்கெட்டைப் பெறத் தவறியதால், அமெரிக்காவுக்குத் திரும்பி அங்கு அதிக போட்டிகளில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார்.

போட்டித்தன்மை கொண்ட அமெரிக்காவில், அதிக போட்டியாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இருப்பதால், ஷெரீன் அங்குத், திரும்ப செல்வதற்கு முடிவு செய்து போட்டிகளில் பங்கேற்கவிருக்கின்றார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)