பொது

சான்றளிக்கப்படாத கட்டிடக் கலைஞர்கள் தொடர்பான விவகாரங்களை களைய சட்டம் 117 போதும்

20/08/2024 05:09 PM

கோலாலம்பூர், 20 ஆகஸ்ட் (பெர்னாமா) -- நாட்டில் பதிவு செய்யப்படாத உள்நாட்டு கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு சேவையை வழங்கும் சான்றளிக்கப்படாத கட்டிடக் கலைஞர்கள் தொடர்பான விவகாரங்களை களைய, சட்டம் 117 அல்லது 1967-ஆம் ஆண்டு கட்டிடக்கலை சட்டம் போதுமானது.

அண்மையக் காலமாக அதிரித்துவரும் அந்நடவடிக்கைகளைத் துடைத்தொழிக்க,  இச்சட்டத்தின் கீழுள்ள பல்வேறு விதிமுறைகள் பயன்படுத்தலாம் என்று பொதுப்பணி அமைச்சர் டத்தோ ஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.

''மேலும், 1994-ஆம் ஆண்டு மலேசிய கட்டுமானத் தொழில் மேம்பாட்டு நிறுவனமான CIDB குத்தகையாளர்களைக் கட்டுப்படுத்தி நிர்வகிக்கிறது. எனவே, அச்சட்டங்களின் கீழ் உள்ள அனைத்து விதிமுறைகளையும் பயன்படுத்தி பிரச்சனைகளைக் களையலாம்,'' என்றார் அவர்.

இன்று, கோலாலம்பூரில் நடைபெற்ற பொதுப்பணி அமைச்சின் மாதாந்திர சந்திப்பு மற்றும் 2024ஆம் ஆண்டு தேசிய மாதக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டப் பின்னர் அலெக்சாண்டர் நந்தா லிங்கி அவ்வாறு கூறினார்.

வீட்டைக் கட்டுவதற்கு அல்லது சீரமைப்ப விரும்புபவர்கள் "மலிவான" குத்தகையாளர் சேவைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்துகிறார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502