பொது

பிரிக்கிஸ் மூலம் பொருளாதார முயற்சிகளை விரிவுபடுத்துவதில் மலேசியா இலக்கு

21/08/2024 04:27 PM

புது டெல்லி, 21 ஆகஸ்ட் (பெர்னாமா) -- வியூக கூட்டு முயற்சிகள் மூலம் ஒத்துழைப்பை அதிகரிப்பதுடன், பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அரசாங்களுக்கு இடையிலான அமைப்பு, பிரிக்ஸ்-இல் பங்கேற்பதன் மூலம், பொருளாதார முயற்சிகளை விரிவுபடுத்துவதை மலேசியா நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதன் காரணமாகவே, மலேசியா பிரிக்ஸ் அமைப்பில் இணைய விண்ணப்பித்திருப்பதாக பிரதமர், டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

''பிரிக்ஸ்-இல் இந்தியாவின் தனித்துவமான மற்றும் செல்வாக்குமிக்க பங்கு முக்கியமானது, ஏனெனில் வலுவான இருதரப்பு உறவுகளுக்கு இது குறிப்பிடத்தக்க மதிப்பைச் சேர்க்கும்,'' என்றார் அவர்.

பிரிக்ஸ்-இல் இணைவது இந்தியாவுடனான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், தொழில்துறை மற்றும் கொள்கைகளில் ஒத்துழைக்க அதிகமான வாய்ப்பை வழங்குவதாக அன்வார் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)