விளையாட்டு

காற்பந்தாட்டத்தின்போது சினமூட்டும் நடவடிக்கையில் ஈடபட வேண்டாம் என பொது மக்களுக்கு நினைவுறுத்து

21/08/2024 06:54 PM

கோலாலம்பூர், 21 ஆகஸ்ட் (பெர்னாமா) -- புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் வரும் சனிக்கிழமை ஜோகூர் டாருல் தஸிம்மிற்கும் சிலாங்கூர் எஃப்சிகும் இடையில் நடைபெறவிருக்கும் எஃப்.ஏ காற்பந்தாட்டத்தின் இறுதி ஆட்டத்தைக் கண்டுகளிக்கும்போது நன்நடத்தையைப் பேணுவதோடு, கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலான சினமூட்டும் நடவடிக்கையில் ஈடபட வேண்டாம் என்று ரசிகர்களுக்கு போலீசார் நினைவுறுத்தியுள்ளனர்.

இவ்வாட்டத்தைக் காண 85 ஆயிரம் காற்பந்தாட்ட ரசிகர்கள் அங்கு கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வேளையில், அரங்கத்தின் உள்ளேயும் வெளியேயும் சுமார் 2,400 உறுப்பினர்கள் பணிக்கு அமர்த்தப்படுவதோடு பாதுகாப்பும் பலப்படுத்தப்படும் என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முஹமட் ஈசா தெரிவித்தார்.

ஏற்பாட்டாளரின் அனுமதி இல்லாமல் பட்டாசு அல்லது மத்தாப்பு, தலைக்கவசம், கூர்மையான பொருட்கள், ஆளில்லா விமானம் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள நுழைவாயிலின்படி அரங்கத்திற்குள் நுழையுமாறும் பொது மக்களுக்கு நினைவுறுத்தப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)