விளையாட்டு

மலேசிய FA கிண்ண காற்பந்து; பின்னிரவு வரை புக்கிட் ஜாலில் எல்ஆர்டி சேவை

22/08/2024 07:10 PM

கோலாலம்பூர், 22 ஆகஸ்ட் (பெர்னாமா) --  கோலாலம்பூர், புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் 2024 மலேசிய FA கிண்ண காற்பந்து போட்டி சனிக்கிழமை, இரவு 9 மணிக்கு நடைபெறும் நிலையில் வருகையாளர்களின் வசதிக்காக புக்கிட் ஜாலில் எல்.ஆர்.டி சேவைகள் பின்னிரவு 1 மணிவரை நீட்டிக்கப்படவுள்ளது.

காற்பந்து போட்டி முடிவடைந்த பின்னர், பார்வையாளர்களின் சீரான போக்குவரத்தை முன்னிறுத்தி கூடுதல் ரயில் சேவை பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக RAPID RAIL நிறுவனம் இன்று, வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

இதர ரயில் நிலையங்கள் வழக்கம் போல் செயல்பட்டாலும் பயணிகள் அந்நிலையங்களிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படுவதாக அதில் குறிப்பிட்டிருந்தது.

தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையங்களில் இருக்கும் Park N’ Ride பார்க்கிங் வசதிகளைப் பயன்படுத்தவும் பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுகின்றது.

ரயில் சேவைகள் குறித்த உடனடி தகவல்களை RAPID KL-இன் சமூக வலைத்தளம் மற்றும் PULSE செயலி மூலம் பயணிகள் தெரிந்துக் கொள்ளலாம்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)