உலகம்

இந்தியா, வங்காளதேச வெள்ளத்தில் 15 பேர் உயிரிழப்பு

23/08/2024 04:15 PM

வங்காளதேசம், 23 ஆகஸ்ட் (பெர்னாமா) -- இந்தியாவின் வடகிழக்கு மற்றும் அண்டை நாடான வங்காளதேசத்தின் கிழக்கு வட்டாரத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கித் தவித்து உதவி நாடும் மக்களைச் சென்றடைவதில் மீட்புக் குழுவினர் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதனால், குறைந்தது 15 பேர் உயிரிழந்த வேளையில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வங்காளதேச எல்லைப்பகுதியில் உள்ள இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற சம்பவங்களால் புதன்கிழமை முதல் குறைந்தது 11 பேர் உயிரிழந்தனர்.

மேலும், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்தியாவும் வங்காளதேசமும் தங்கள் எல்லைப்பகுதியில் பொதுவான நதிகளைக் கொண்டிருக்கும் வேளையில், வங்காளதேசத்தில் மேலும் நால்வர் கொல்லப்பட்டனர்.

திரிபுரா மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் பெய்த மழை மற்றும் நீர் பெருக்கத்தால் கிழக்கு வங்காளதேசத்தில் பல பகுதிகள் சேதமடைந்தன.

குமில்லா, ஃபெனி மற்றும் நோகாலி போன்ற மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின்சாரமும், சாலை இணைப்புகளும் துண்டிக்கப்பட்டதால், மீட்புக் குழுவின் உதவி கோரப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)