விளையாட்டு

சுக்மா: அஞ்சல் ஓட்டத்தில் சிலாங்கூருக்கு 2 தங்கம்

23/08/2024 07:52 PM

சரவாக், 23 ஆகஸ்ட் (பெர்னாமா) --  திடல்தட போட்டியின் இறுதி நாளான இன்று, சிலாங்கூர் இரு தங்கப் பதக்கங்களை வென்று சரவாக் அரங்கிலிருந்து வெளியேறுகிறது.

ஆடவர் மற்றும் மகளிருக்கான அஞ்சல் ஓட்டப் பந்தயத்தின் மூலம் சிலாங்கூர் தனது இலக்கை நிறைவு செய்துள்ளது.

அஹ்மாட் சுஃபி முஹமட் ஃபைசால், டென்னிஷ் இர்பான் தம்ரின், முஹமட் அபிக் முஹமட் ஆக்ஹிர்  மற்றும் அடாம் ஹக்கிம் சம்சூடின் ஆகியோர் 40.86 விநாடிகளில் அஞ்சல் ஓட்டத்தை முடித்து தங்கம் வென்றனர்.

அதேபோல, மகளிருக்கான அஞ்சல் ஓட்டத்தில் டெனி மார்செல்லா ஏசான் ஃபைச் சிவம், நூர் அப்ரினா பட்ரிஷா முஹமட் ரிசால், அய்னா பட்ரிஷா அப்துல்லா மற்றும் லீ யீ தெங் மற்றும் ஆகியோரின் வழி சிலாங்கூர் இரண்டாம் தங்கத்தைக் கைப்பற்றியது.

மற்றுமொரு நிலவரத்தில், தேசிய திடல்தட வீரர், ஜோகூரின் உமார் ஒஸ்மான் சுக்மாவில் தமது நான்காவது தங்கத்தை வென்று கவனம் ஈர்த்துள்ளார்.

ஆடவருக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்த அவர், 1992 ஆம் ஆண்டு ஜோகூரில் நடந்த சுக்மாவில், ஜி. அம்புமணி எனும் வீரர் பதிவு செய்திருந்த 32 ஆண்டுகால சாதனையையும் முறியடித்தார்.

இப்போட்டியில், இரண்டாம் மூன்றாம் இடங்களைக் கூட்டரசு பிரதேசத்தின் பி.ரிஷேராம் மற்றும் பகாங்கின் எஸ். ஶ்ரீ முருகனும் வென்றனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)