உலகம்

காசா மீது இஸ்ரேலின் தாக்குதல் விரைவில் நிறுத்தப்படும் - ஜோ பைடன்

01/09/2024 06:04 PM

காசா, 01 செப்டம்பர் (பெர்னாமா) -- காசா மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல் கூடிய விரைவில் நிறுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார்.

போர் நிறுத்தம் தொடர்பான பேச்சு வார்த்தை நிறைவடைந்திருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

போர் நிறுத்தம் தொடர்பான அடிப்படை உடன்பாடு எட்டப்பட்டிருப்பதாகவும் ஜோ பைடன் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட தரப்பினர் போர் நிறுத்தம் தொடர்பாக கொள்கை அளவில் ஒப்புதல் தெரிவித்திருப்பாகவும் அவர் கூறினார்.

''இன்னும் நம்பிக்கை இருக்கிறது. இரு தலைவர்களும் எகிப்தில் சந்தித்தனர். எங்களது ஆட்கள் தொடர்ந்து சந்தித்திருக்கின்றனர். நாங்கள் ஒப்பந்தத்தை எட்டியுள்ளோம் என்று நாங்கள் நினைக்கிறோம். அவர்கள் அனைவரும் கொள்கை அளவில் ஒப்புக் கொண்டுள்ளனர் என்று கூறியுள்ளனர். எனவே, காத்திருங்கள்,'' என்றார் அவர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி, காசா மீது இராணுவத் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.

இதனால் சுமார் 40,691 பேர் கொல்லப்பட்டதுடன் 94,060 பேர் காயமடைந்துள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)