விளையாட்டு

அமெரிக்க பொது டென்னிஸ் போட்டி; மூன்றாம் சுற்றில் ஸ்விடேக் வெற்றி

01/09/2024 07:37 PM

நியூயார்க், 01 செப்டம்பர் (பெர்னாமா) --  அமெரிக்க பொது டென்னிஸ் போட்டியின் நான்காம் சுற்றுக்கு உலகின் முதன் நிலை வீராங்கனை இகா ஸ்விடெக் முன்னேறினார்.

அவர் உலகத் தரவரிசையில் 17-வது இடத்தில் இருக்கும் அனஸ்தேசியா பாவ்லியு-செங்கோவாவை நேரடி செட்களில் வீழ்த்தினார்.

2022 அமெரிக்க பொது டென்னிஸ் பட்டத்தை வென்ற இகா ஸ்விடெக் 6-4, 6-2 என்று முன்னாள் இரண்டாம் நிலை வெற்றியாளரான அனஸ்தேசியா பாவ்லியு-செங்கோவாவை மிக எளிதில் தோற்கடித்தார்.

கடந்த ஆண்டு ரோமில் நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்விடெக் 6-0, 6-0 எனும் நிலையில், பாவ்லியுசெங்கோவாவை தோல்வியடைச் செய்தார்.

காலிறுக்குச் சுற்றுக்காக, நாளை நடைபெறும் மிகச் சிறந்த 16 வீராங்கனைகள் சந்திக்கும் ஆட்டத்தில் ஸ்விடெக் ரஷ்யாவின் லியுட்மிலா சாம்-சோனோவாவை சந்திக்கின்றார்.

இதனிடையே, 6-3, 6-4 என்ற நேரடி செட்களில் கசஸ்தானின் யூலியா புடின்ட்சேவாவை தோற்கடித்திருக்கும் இத்தாலியின் ஜாஸ்மின் பயோலினி தமது மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை நோக்கிய பயணத்தைத் தொடர்கின்றார்.

அமெரிக்க போட்டியில் நான்காவது சுற்றுக்கு முதன் முறை முன்னேறிய பயோலினி அடுத்த சுற்றில் செக் குடியரசின் கரோலினா முச்சோவா உடன் மோதுகின்றார்.

ஆடவருக்கான ஒற்றையர் ஆட்டத்தில் இரண்டாம் கிராண்ஸ்லாமிற்கு குறி வைத்திருக்கும் உலகின் முதன் நிலை விளையாட்டாளர் ஜன்னிக் சின்னர்  6-1, 6-4, 6-2 எனும் நிலையில் மூன்றாம் சுற்றில் வெற்றி அடைந்துள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)