உலகம்

பிலிப்பைன்சை தாக்கிய யாகி வெப்பமண்டல புயல்; இருவர் பலி

02/09/2024 06:03 PM

பிலிப்பைன்ஸ், 02 செப்டம்பர் (பெர்னாமா) -- பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய யாகி வெப்பமண்டல புயலினால் இருவர் உயிரிழந்ததோடு, அதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்தப் புயலினால், மணிலா உட்பட சில பகுதிகளில் மோசமான வெள்ளம் ஏற்பட்டது.

அதோடு, ஆபத்தான சூழ்நிலை காரணமாக அதிகாரிகள் பள்ளி வகுப்புகளையும் அரசாங்க வேலைகளையும் தற்காலிகமாக நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் நிறுவனம் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இப்புயலினால், சில உள்நாட்டு விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கிழக்கு மற்றும் மத்திய துறைமுகங்களில் கடல் பயணம் நிறுத்தப்பட்டதால் 2,200 க்கும் மேற்பட்ட பயணிகள் சிக்கித் தவிப்பதாக கடலோர பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் உள்ளூர் அதிகாரிகள் வழங்கும் அண்மையத் தகவல்கள் குறித்து தெரிந்துகொள்ளவும், தங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)