உலகம்

காசாவில் போலியோ தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கை தொடக்கம்

02/09/2024 06:16 PM

காசா, 02 செப்டம்பர் (பெர்னாமா) -- காசா பகுதிகளில் போலியோ தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கை நேற்று தொடங்கப்பட்டது.

இந்நடவடிக்கை வரும் புதன்கிழமை வரை டெய்ர் அல்-பாலா பகுதியில் மேற்கொள்ளப்படும் என்று உலக சுகாதார நிறுவனம், WHO குறிப்பிட்டுள்ளது.

காசா பகுதியில் உள்ள 600,000-க்கும் மேற்பட்ட சிறுவர்களை இலக்காகக் கொண்டு இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

கான் யூனிசிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் செப்டம்பர் 5 தொடங்கி 8ஆம் தேதி வரையில் இந்தத் தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

காசாவிலும் வட காசாவிலும் செப்டம்பர் 9 முதல் 12ஆம் தேதி வரை இந்நடவடிக்கை செயல்படுத்தப்படும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)