BREAKING NEWS   Paris route represents Malaysia Airlines’ 68th destination and will be served by A350-900 aircraft - Capt Izham | 
 விளையாட்டு

2024 பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் மலேசியாவிற்கு முதல் தங்கம்

03/09/2024 04:50 PM

பாரிஸ், 03 செப்டம்பர் (பெர்னாமா) -- 2024 பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் நாட்டின் முதலாவது தங்கப் பதக்கத்தை வென்றார் பாரா பூப்பந்து வீரர் சியா லெய்க் ஹாவ்.

திங்கட்கிழமை நடைபெற்ற உடல் குறைபாடுள்ள ஆண்களுக்கான SU5 ஒற்றையர் பிரிவில், சியா லெய்க் மலேசியாவுக்கான முதல் தங்கத்தை வென்றார்.

PORTE DE LA CHAPELLE ARENA அரங்கில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தோனேசியாவின் சூர்யா நூக்ரொஹொவை  42 நிமிடங்களில் தோற்கடித்து, சியா லெய்க், 2020 தோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் பெற்ற வெற்றியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

21-13, 21-15 என்ற புள்ளி கணக்கில் அவர், சூர்யாவை வென்றார்.

முதல் செட்டின் தொடக்கத்தில் 3 -3 என்ற சமநிலைக்குப் பின்னர் உலகின் முதல் நிலை விளையாட்டாளரான அவர், ஆட்டத்தை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து 17-10 என்ற புள்ளிகளை எளிதாக பெற்று முன்னிலை வகித்தார்.

பின்னர், ஆட்டத்தின் இறுதியில், 21-13 எனும் புள்ளிகளில்,  சியா லெய்க் வெற்றி பெற்றார்.

தமது வலது கையை மட்டுமே பயன்படுத்தி விளையாடிய இந்தோனேசிய ஆட்டக்காரர், இரண்டாவது செட்டில் 14-15 என்ற புள்ளி கணக்கில் பின் தங்கினார்.

அதன் பின்னர், 21-15 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்ற சியா லெய்க் பாராலிம்பிக் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)