உலகம்

காசாவில் போரை நிறுத்த போதிய நடவடிக்கைகளை பெஞ்சமின் மேற்கொள்ளவில்லை

03/09/2024 05:24 PM

இஸ்ரேல், 03 செப்டம்பர் (பெர்னாமா) -- காசாவில் போர் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதான்யாஹு போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றம் சாட்டியிருக்கிறார்.

ஹமாஸ் தரப்பால் சிறைப் பிடிக்கப்பட்ட பணயக் கைதிகளில் அறுவர் கொல்லப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி நேதான்யாஹு போர் நிறுத்தத்திற்கு முக்கியத்துவம் வழங்கவில்லை என்று ஜோ பைடன் சாடினார்.

நிருபர்: பணயக் கைதிகள் குடும்பத்திற்குச் செய்தி உண்டா?

பைடன்: நான் அமெரிக்க பணயக் கைதியிடம் பேசினேன். நான் அவருடைய அம்மா மற்றும் அப்பாவிடம் பேசினேன். நாங்கள் விட்டுவிடவில்லை. எங்களால் முடிந்தவரைச் செய்வோம்.

கிட்டத்தட்ட 11 மாத காலமாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவர ஹமாஸ் உடனான ஒப்பந்தத்தில்  நேதான்யாஹு கையெழுத்திட்டிருந்தால்  பிணைக் கைதிகள் காப்பாற்றப்பட்டிருக்கலாம் என்று இஸ்ரேல் மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்நிலையில், போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தத்தை எட்டத் தவறியதற்கு கண்டனம் தெரிவித்து இஸ்ரேலில் நேற்று வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)