விளையாட்டு

2024 பாரிஸ் பாராலிம்பிக்: நீளம் தாண்டும் போட்டியில் மலேசியா வெள்ளி

08/09/2024 06:00 PM

பாரிஸ், 08 செப்டம்பர் (பெர்னாமா) --  2024 பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில், ஆடவருக்கான T20 பிரிவின் நீளம் தாண்டும் போட்டியில் மலேசியா வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியது.

அப்போட்டியில்.தங்கம் வெல்லும் இலக்கில் களமிறங்கிய தேசிய தடகள வீரர் டத்தோ அப்துல் லத்திவ் ரொம்லி  இன்று காலையில் வெள்ளி பதக்கத்தை வென்றார்.

Stade de France அரங்கில் நடைபெற்ற அப்போட்டியில், சவூதி அரேபியா வீரருடன் போட்டியிட்ட டத்தோ அப்துல் லத்திவ் ரொம்லி முதல் முயற்சியில் 7.22 மீட்டர் நீளம் வரை தாண்டினார்.

பெர்லிஸைச் சேர்ந்த அவர், தமது இரண்டாவது முயற்சியில் 7.43 மீட்டர் தூரத்துடன் முன்னிலை வகித்தார்.

மூன்றாவது முயற்சியில் 7.45 மீட்டர் தூரத்துடன் சாதனைப் படைத்தார்.

27 வயதான ரொம்லி, இறுதியில், தமது வேகத்தைத் தற்காத்துக்கொள்ள தவறியதால் முதலிடத்தை நழுவ விட்டார்.

7.51 மீட்டர் சாதனையுடன் தங்கம் சவூதி ஆரேபியாவுக்குச் சொந்தமானது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)