உலகம்

இம்ரான் கானை விடுவிக்கக் கோரி இஸ்லாமபாட்டில் ஆதரவாளர்கள் பேரணி

09/09/2024 04:08 PM

இஸ்லாமபாட், 09 செப்டம்பர் (பெர்னாமா) -- பாகிஸ்தானில் சிறைத் தண்டனையை எதிர்நோக்கி வரும் அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள், அவரை விடுவிக்கக் கோரி தலைநகர் இஸ்லாமபாட்டின் புறநகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்தினர்.

150-க்கும் மேற்பட்ட போலீஸ் வழக்குகள் தொடர்பில், ஓராண்டுக்கும் மேலாக அவர் சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார்.

பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷேரிஃப் முக்கிய போட்டியாளரான கான், இந்த வழக்குகள் இருந்தபோதிலும் ஒரு பிரபலமான நபராகவே இருக்கிறார்.

அதோடு, விமர்சகர்களும் அவரது கட்சியும், அந்த வழக்குகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று தெரிவித்து வருகின்றனர்.

அவர், 2022-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

கானின் பாகிஸ்தான் தேரேக் ஈ இன்சாஃப் அல்லது பிட்டி கட்சி இவ்வாண்டில் நடத்திய மிகப்பெரிய பேரணியான ஞாயிற்றுக்கிழமை பேரணி அமைதியாக நடைபெற்றது.

எனினும், போலீசாருக்கும் சில ஆர்வலர்களுக்கும் இடையே சிறிது நேரம் மோதல் ஏற்பட்டது.

முன்னதாக, கானின் ஆதரவாளர்கள் பேரணியில் கலந்து கொள்ள விடாமல் தடுக்கும் வகையில், அதிகாரிகள் முக்கிய சாலைகளை மூடினர்.

ஊழல் வழக்கில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு கான், கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ) 502