உலகம்

மணிப்பூரில் அமைதி நிலவ மாணவர்கள் கோரிக்கை

12/09/2024 07:07 PM

மணிப்பூர், 12 செப்டம்பர் (பெர்னாமா) -- இந்தியா, மணிப்பூரில் நிகழ்ந்த கலவரத்தை தொடர்ந்து, ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் அங்கே அமைதி நிலவ வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கலவரத்தை கட்டுப்படுத்தி, மக்களிடையே பாதுகாப்பை அதிகரிக்க மத்திய அரசாங்கம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் அறிவுறுத்தியிருக்கின்றனர்.

''நாங்கள் போரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமா அல்லது படிக்க வேண்டுமா? எதைத் தேர்வு செய்ய வேண்டும்? ஆளுநர், மரியாதைக்குரிய முதல்வர், மரியாதைக்குரிய குடியரசுத் தலைவர் போன்றவர்கள் - எங்கள் சிறிய மாநிலமான மணிப்பூரில் வன்முறையைத் தடுக்க வழிகளைக் கண்டறியுங்கள்,'' என்றார் பிரியங்கா தேவி.

கலவரம் குறித்த போலி செய்திகளை பரவாமல் தடுக்க, மணிப்பூரில் கடந்த ஐந்து நாள்களாக இணைய சேவை முடங்கியுள்ளது.

மெய்தேய் மற்றும் குக்கி சமூகத்தினர் இடையே கடந்த ஆண்டு தொடங்கி நிகழ்ந்து வரும் சண்டையினால், 225 பேர் கொல்லப்பட்டதுடன், சுமார் 60,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

மணிப்பூரில் ஆட்சி செய்யும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி, இக்கலவரம் குறித்து இதுவரை எந்தவொரு கருத்தும் வெளியிடவில்லை.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)