உலகம்

கமலாவுடன் மீண்டும் விவாதிக்க தயார் - டிரம்ப்

12/09/2024 07:25 PM

பென்சில்வேனியா, 12 செப்டம்பர் (பெர்னாமா) -- அதிபர் தேர்தலில் போட்டியிடும் துணை அதிபர் கமலா ஹாரிஸ்சுடன் மீண்டும் விவாதம் மேற்கொள்ள தயராக இருப்பதாக முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

இரண்டாம் முறையாக விவாதம் மேற்கொள்ள திட்டம் ஏதும் இல்லை என்றாலும், அதற்கான வாய்ப்பு கிடைத்தால் தாம் அதனை தவறவிடப் போவதில்லை என்று டிரம்ப் கூறுகிறார்.

''இல்லை. நாங்கள் அதைப் பரிசீலிப்போம். ஆனால் நீங்கள் வெற்றிபெறும்போது, ​​நீங்கள் அதை இரண்டாவது முறையாகச் செய்ய வேண்டிய அவசியமில்லை. எனவே நாங்கள் பரிசீலிப்போம். ஆனால் நேற்று இரவு நாங்கள் ஒரு முறையான விவாதம் செய்தோம் என்று நினைக்கிறேன்,'' என்றார் அவர்.

நேற்று நடைபெற்ற, முதல் நேரடித் தொலைக்காட்சி விவாதத்தில் கமலா வெற்றி பெற்றதாக ஆரம்பக்கட்ட கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.

இருப்பினும், தாங்கள் வெற்றிபெற்றதாக இரு தரப்புமே அறிவித்திருக்கின்றன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)