உலகம்

இலியானா வெப்பமண்டல புயல்; பாஜா கலிபோர்னியா மாநிலம் பாதிப்பு

14/09/2024 08:06 PM

பாஜா கலிபோர்னியா, 14 செப்டம்பர் (பெர்னாமா) -- நேற்று வெள்ளிக்கிழமை, மெக்சிகோவின் வடக்கு பாஜா கலிபோர்னியா மாநிலத்தில் கரையைக் கடந்த இலியானா வெப்பமண்டல புயலினால், அத்தெருக்கள் முழுவதும் வெள்ளம் உட்பட சேறும் சகதியுமாய் காட்சியளித்தன

தீபகற்பத்தின் தெற்கில் உள்ள Cabo San Lucas-யை இப்புயல் தாக்கியது.

இதனிடையே, 150 முதல் 250 மில்லிமீட்டர் வரை மழை பெய்யும் அபாயம் இருப்பதாகவும், பிற்பகல் மற்றும் இரவு நேரங்களில் 70 முதல் 90 மில்லிமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று மெக்சிக்கோ தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கலிபோர்னியா

கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால், உயர்ந்து வரும் வெப்பநிலையிலிருந்து பாதுகாக்க அப்பகுதியில் உள்ள விலங்குகளை வெளியேற்றும் நடவடிக்கை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் இருந்து சுமார் 105 மைல் அதாவது 168 கிலோமீட்டர் தொலைவில் உள்ள The Living Desert Zoo மற்றும் Gardens in Palm Desert போன்ற விலங்கியல் பூங்காவிற்கு சில விலங்குகளை, The Big Bear Alpine கொண்டுச் சென்றுள்ளது.

மாசடைந்த காற்றின் தரம் உட்பட காட்டுத்தீ-யின் காரணமாக ஏற்படும் உடனடி அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பியா

இதனிடையே, மத்திய ஐரோப்பியாவின் ஸ்லோவேனியா பகுதியில் கடந்த வியாழக்கிழமை பெய்த கனத்த மழையால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இனி வரும் நாட்களில், தெற்கு ஜெர்மனி, ஆஸ்திரியா, போலந்து மற்றும் ஸ்லோவாக்கியாவின் சில பகுதிகள் உட்பட மத்திய ஐரோப்பாவைச் சுற்றிலும் கனமழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

பெரு

மற்றொரு நிலவரத்தில், பெருவின் முன்னாள் ஜனாதிபதி அல்பெர்தோவின் மறைவைத் தொடர்ந்து, நேற்று ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் அவருக்கு இறுதி மரியாதைச் செலுத்தினர்.

கடந்த 10 ஆண்டுகளாக பதவியில் இருந்தபோது, அவர் செய்த முறைக்கேடுகள் குறித்தும் சிலர் விமர்சித்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை புற்றுநோயால் காலமான முன்னாள் ஜனாதிபதியின் நல்லுடல் தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அவருக்கு இறுதி மரியாதை செலுத்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் திரண்டனர்.

1990-ஆம் ஆண்டுகளில் பேருவில் நிலவிய கடுமையான பொருளாதார நெருக்கடி உட்பட பணவீக்கத்தைக் களைந்து, நிலையான சந்தை கொள்கையை அமைத்துக் கொடுத்ததால், ஃபுஹிமோரி மக்கள் மத்தியில் போற்றப்பட்டார்.

இதனிடையே, அவரது சர்வாதிகார ஆட்சிமுறையின் மூலம் நாட்டை அமைதிப்படுத்தியது உட்பட வரி சலுகைகளுக்கு அங்கீகாரம் வழங்கி முக்கிய துறைகளில் அந்நிய முதலீட்டை ஈர்த்து, வறுமையை குறைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)