உலகம்

டிரம்ப்பைக் கொலை செய்ய முயற்சித்தாக சந்தேகிக்கப்படும் விவகாரம் குறித்து FBI விசாரணை

16/09/2024 07:03 PM

ஃபுளோரிடா, 16 செப்டம்பர் (பெர்னாமா) --  அமெரிக்கா, ஃபுளோரிடாவில் உள்ள West Palm Beach-யில் அமைந்துள்ள தமது கோல்ப் கிளப்பில் அமெரிக்க முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் கொலை செய்ய முயற்சிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருவதாக FBI குறிப்பிட்டுள்ளது.

எனினும், டிரம்ப் காயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பாக இருப்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

டிரம்பை நோக்கி துப்பாக்கியைக் காட்டிய ஆடவர் மீது அமெரிக்க ரகசிய சேவை முகவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

டிரம்ப் இருக்கும் இடத்திலிருந்து, சுமார் 400 முதல் 500 அடி தூரத்தில் உள்ள புதருக்குள் ஒளிந்து கொண்டிருந்த அந்த ஆயுதமேந்திய நபர், வேலியின் மீது தமது இரண்டு பைகளையும், GoPro வகை கேமராவையும் வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

“எனவே, விசாரணையில் எங்களுக்குத் தெரியும். சந்தேகத்திற்குரிய ஒருவரை இப்போது காவலில் வைத்துள்ளோம். அது குறித்து செய்ய வேண்டிய வேலை எங்களுக்கு இன்னும் கொஞ்சம் இருக்கிறது. ஆனால் நாங்கள் வழக்கமாக செய்வது போல், நாங்கள் அவர்களை கவுண்டி சிறையில் அடைக்கப் போவதுடன் அவர் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யவுள்ளோம். நாங்கள் அது குறித்த தகவலையும், சம்பந்தப்பட்டவரின் புகைப்படம் உட்பட பின்னணி விவரங்களை பெற்று உங்களிடம் தெரிவிப்போம்”, என்று அவர் கூறினார்.

ரியான் ரூத் என்று அடையாளம் காணப்பட்ட அந்நபர், SUV ரக காரில் தப்பிச் சென்ற பின்னர், கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)