உலகம்

ஊதியம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட சம்சுங் எலக்ட்ரோனிக்ஸ் நிறுவனத் தொழிலாளர்கள் கைது

17/09/2024 06:02 PM

தமிழ்நாடு, 17 செப்டம்பர் (பெர்னாமா) -- போதிய ஊதியம் கோரி, தமிழ்நாடு ஸ்ரீபெரும்புதூரில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சம்சுங் எலக்ட்ரோனிக்ஸ் நிறுவனத் தொழிலாளர்கள் சிலரை போலீஸ் கைது செய்தது.

அனுமதி இன்றி, பேரணியில் ஈடுபட முற்பட்டதால் அவர்கள் கைது செய்யப்பட்டதாக போலீஸ் விளக்கம் அளித்துள்ளது.

கடந்த ஏழு நாட்களாக சம்சுங் எலக்ட்ரோனிக்ஸ் நிறுவனத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில், வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்று அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

தொழிற்சங்கம் மூலம் வைக்கப்படும் பரிந்துரைகளையும் கோரிக்கைகளையும் அந்நிறுவனம் இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை.

தொலைக்காட்சிகள், குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் சலவை இயந்திரங்கள் போன்ற பொருட்களைத் தயாரிக்கும் இந்த தொழிற்சாலை, இந்தியாவில் செயல்படும் சம்சுங் நிறுவனத்தின் ஆண்டு வருமானத்தில் 20 முதல் 30 விழுக்காடு வரை பங்களிக்கிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)