விளையாட்டு

பெர்னாமா பணியாளர்களுக்கு இடையில் வலைப்பந்து போட்டி

22/09/2024 07:42 PM

செத்தியவங்சா, 22 செப்டம்பர் (பெர்னாமா) -- இன்று, மலேசிய தேசிய செய்தி நிறுவனம், பெர்னாமாவின் பணியாளர்கள் கிளப் மற்றும் பெர்னாமா NETBALLERZ கிளப் ஏற்பாட்டில் நடைபெற்ற வலைப்பந்து போட்டியில், BTV SISTER SQUAD அணி வாகை சூடியது.

இந்த வெற்றியின் மூலம் அந்த அணி 400 ரிங்கிட் ரொக்கம் உட்பட பதக்கத்தை வென்ற நிலையில், QUEEN BEES மற்றும் PINK DREAMERS அணிகள் முறையே இரண்டாம், மூன்றாம் நிலைகளில் வெற்றிப் பெற்றன.

கோலாலம்பூர், செத்தியவங்சா, தேசிய விளையாட்டு மன்றத்தின் விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற இப்போட்டியில் பெர்னாமாவின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 60 பணியாளர்கள் ஆறு அணிகளாக பங்கேற்றனர்.

விளையாட்டுத் திறனை வெளிப்படுத்துவது மட்டுமின்றி விளையாட்டு நடவடிக்கைகளின் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்தி, பெர்னாமா பணியாளர்களிடையே சகோதரத்துவத்தையும் நட்பையும் வலுப்படுத்துவதற்கான சிறந்த தளமாகவும் இந்தப் போட்டி அமைந்ததாக பெர்னாமா தலைமை செயல்முறை அதிகாரி நூருல் அஃபிடா கமாலுடின் தெரிவித்தார்.

"பெர்னாமாவில் இன்னும் வேலை செய்பவர்களுக்கு, காலை முதல் இரவு வரை என வேலை நேரம் ஒரே மாதிரியாக இருக்காது. ஒரு குழுவாக இணைந்து விளையாடுவது பெர்னாமா பணியாளர்களுக்கு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்பதை நான் காண்கிறேன்", என்று அவர் கூறினார்.

இன்று, நடைபெற்ற இப்போட்டிக்கு வருகை மேற்கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)