அரசியல்

மக்கோத்தா:  வாக்களிப்புப் பெட்டி பரிசோதனை சுமூகமாக மேற்கொள்ளப்பட்டது

27/09/2024 05:32 PM

குளுவாங் , 27 செப்டம்பர் (பெர்னாமா) -- நாளை நடைபெறும்  மக்கோத்தா சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு இன்று குளுவாங், துங்கு இப்ராஹிம் இஸ்மாயில் மண்டபத்தில் வாக்களிப்புப் பெட்டி பரிசோதனை சுமூகமாக மேற்கொள்ளப்பட்டது.

மேலும், இந்த இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையத்தைச் சேர்ந்த 1,126 அதிகாரிகள் நாளை பணிக்கு அமர்த்தப்படுவர் என்று அதன் செயலாளர் டத்தோ இக்மால்ருடின் இஷாக் தெரிவித்தார். 

இன்று, வாக்களிப்பு இடத்திற்கான தலைவர் மேற்கொண்ட தேர்தலுக்கான வசதிகள் மற்றும் உபகரணங்கள் குறித்த விளக்கமும் பரிசோதனையும் சுமூகமாக நடைபெற்றது பெர்னாமா தொலைக்காட்சி மேற்கொண்ட கண்ணோட்டத்தில் தெரிய வந்தது.

அதோடு, 20 வாக்களிப்பு மையங்களின் தயார்நிலை பணிகளும் சுமூகமாக நடைபெற்றதாக அவர் தெரிவித்தார்.

வாக்களிப்பு தினத்தன்று, மாலையில் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் காலையிலேயே வாக்களிக்க அவர் வாக்காளர்களுக்கு அறிவுறுத்தினார்.

மக்கோத்தா சட்டமன்ற இடைத்தேர்தலில், தேசிய முன்னணியை சேர்ந்த சைட் ஹுசேன் சைட் அப்துல்லாவிற்கும் பெரிக்காத்தான் நேஷனலை சேர்ந்த முஹமட் ஹய்சான் ஜபாருக்கு இடையில் நேரடி போட்டி நிலவுகிறது. 
 
-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)