விளையாட்டு

அரையிறுதி ஆட்டத்திற்கு செக் குடியரசின் கரோலினா தேர்வு

05/10/2024 06:09 PM

பெய்ஜீங் , 05  அக்டோபர் (பெர்னாமா) - சீனப் பொது டென்னிஸ் போட்டியில் அரையிறுதி ஆட்டத்திற்கு, செக் குடியரசின் கரோலினா மச்சோவா தேர்வாகினார்.

மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று, ஒலிம்பிக் போட்டியின் வெற்றியாளர்
சேங் குவின்வெனும் அரையிறுதிக்கு முன்னேறினார்.

அமெரிக்க பொது டென்னிஸ் போட்டியின் வெற்றியாளர் அரினா சபலெங்காவுடன் கரோலினா மச்சோவா விளையாடினார்.

முதல் செட்டில் 7-6 என்று மச்சோவா வெற்றி பெற்றாலும், இரண்டால் செட்டில் 2-6 என்ற புள்ளிகளில் தோல்வியுற்றார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாம் செட்டில் 6-4 என்று வெற்றி பெற்று, மச்சோவா அரையிறுதிக்கு செல்லும் தமது பயணத்தை தொடர்ந்தார்.

மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் 17 வயதான ரஷ்யாவின் மீரா ஆண்ட்ரீவா, உலகின் ஏழாம் நிலை விளையாட்டாளரான சேங் குவின்வெனுடன் விளையாடினார்.

முதல் செட்டில் 5-7 என்று ஆண்ட்ரீவா வெற்றி பெற்றாலும் அடுத்த இரண்டு செட்களையும் 6-0 6-4 என்ற புள்ளிகளில் சேங் கைப்பற்றினார்.

அரையிறுதி ஆட்டத்தில்சேங், மச்சோவாவுடன் விளையாடவுள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)