பொது

பிற மொழிகளுக்கான முக்கியத்த்தினால் மலாய் மொழியின் அவசியத்தை குறைக்கக் கூடாது

06/10/2024 04:05 PM

ஈப்போ , 06 அக்டோபர் (பெர்னாமா) - ஒரு மொழிக்கு வழங்கப்படும் முக்கியதுவம், தேசிய மொழியான மலாய் மொழியை ஓரங்கட்டும் அளவுக்கு அமைந்து விடக்கூடாது என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நினைவுறுத்தியுள்ளார்.

பள்ளிகளில், சீனம், தமிழ் போன்ற பிற மொழிகளுக்கு வழங்கப்படும் முக்கியத்தும், மலாய் மொழியின் அவசியத்தை குறைக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

''சவாலான உலகில் ஆங்கிலத்தில் புலமையும், சீனம் அல்லது தமிழ், அரபு மற்றும் பிற மொழிகளில் தேர்ச்சியும் தேவை என்பதை வலியுறுத்துபவர்களில் நானும் ஒருவன். உலகின் முக்கிய மொழிகளை ஒதுக்கி வைக்கும் அளவுக்கு வளர்ச்சியடைந்த நாடு என்பது எதுவும் இல்லை. இருப்பினும், அது ஒதுக்கப்படும் அளவுக்கு இருக்கக்கூடாது,''  என்றார் அவர்.

கூட்டரசு அரசயலைப்பு மற்றும் தேசியக் கல்விக் கொள்கையில் மலாய் மொழிக்கு ஒரு தனி இடம் இருப்பதாகவும், தனியார் துறையிலும் அதே முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று டத்தோ ஶ்ரீ அன்வர் இப்ராஹிம் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)