விளையாட்டு

சீன பொது டென்னிஸ் பட்டத்தை வென்றார் கோகோ காஃப்

07/10/2024 07:24 PM

சீனா, 07 அக்டோபர் (பெர்னாமா) --  சீன பொது டென்னிஸ் பட்டத்தை அமெரிக்காவின் கோகோ காஃப் கைப்பற்றினார்.

நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அவர் செக் குடியரசின் கரோலினா முச்சோவாவை நேரடி செட்களில் அவர் வீழ்த்தி வெற்றியாளரானார்.

20 வயதுடைய கோகோ காஃப் 6-1, 6-3 என்று மிக எளிதாக தமது வெற்றியை உறுதி செய்தார்.

1 மணி நேரம் 16 நிமிடத்தில் இந்த போட்டி முடிவுக்கு வந்தது.

இது கரோலினா முச்சோவா எதிராக கோகோ காஃப் பெற்ற மூன்றாவது வெற்றியாகும்.

சீன பொது டென்னிஸ் பட்டத்தை வென்ற இரண்டாவது அமெரிக்க வீராங்கனை என்ற பெருமையை கோகோ காஃப் பெற்றுள்ளார்.

இதற்கு முன்னர், செரீனா வில்லியம்ஸ் 2004 மற்றும் 2013-ஆம் ஆண்டுகளில் அதன் கிண்ணத்தை வென்றுள்ளார்.

டென்னிஸ் உலகில் ஒட்டுமொத்தமாக கோகோ காஃப்க்கு இது எட்டாவது பட்டமாகும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)