உலகம்

லெபனான் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்; பலி எண்ணிக்கை 2,141-ஆக அதிகரிப்பு

10/10/2024 03:06 PM

லெபனான், 10 அக்டோபர் (பெர்னாமா) -- லெபனான் மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தொடர் தாக்குதல்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,141-ஆக அதிகரித்திருக்கின்றது.

மேலும் 10,099 பேர் காயமடைந்திருக்கின்றனர்.

காசா மீது தாக்குதல் மேற்கொண்டு வரும் இஸ்ரேல் கடந்த ஆண்டு அக்டோபர் 8-ஆம் தேதி தொடங்கி லெபனானில் செயல்படும் ஹெஸ்போலா அமைப்பு மீதான தாக்குதலை துவங்கியது.

இப்போரினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இடம்பெயர்ந்தவர்கள் தங்குவதற்கு சுமார் 1,000 தங்குமிடங்களை லெபனான் அரசாங்கம் நிறுவியுள்ளது.

இடம்பெயர்ந்த ஒரு லட்சத்து 80,000 பேர் அந்த தங்குமிடங்களில் வசித்து வருகின்றனர்.

நேற்று தெற்கு லெபனானில் உள்ள ஹெஸ்போலா பகுதிகளை தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது.

இத்தாக்குதலில், ஹெஸ்போலா வீரர்கள் அதிகமானோர் கொல்லப்பட்டதுடன் 500 க்கும் மேற்பட்ட ஆயுத கிடங்குகள் அழிக்கப்பட்டன.

இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்வதால், பணவீக்கம் மற்றும் உணவு உற்பத்தி பாதிப்பு ஆகியவற்றால் லெபனான் போராடி வருகிறது.

உணவு நெருக்கடி ஏற்படக்கூடும் என்று அந்நாட்டு மக்கள் அச்சம் தெரிவித்திருக்கின்றனர்.

பணவீக்க விகிதம் 40 விழுகாட்டிற்கும் மேல் உயர்ந்துள்ளது.

இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மிகவும் உயர்ந்துள்ள நிலையில் பல குடும்பங்களுக்கு அடிப்படைப் பொருள்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்களின் விலை இரட்டிப்பு அல்லது மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)