பொது

செக்கு டின் இல்லத்திற்கு அருகில் உள்ள பள்ளிக்கூடத்தில் பணிபுரிய கல்வி அமைச்சு அனுமதி

26/10/2024 06:16 PM

நிபோங் திபால், 26 அக்டோபர் (பெர்னாமா) -- தமது மனைவியின் சுகாதாரப் பிரச்சனை காரணமாக, செக்கு டின் என்றழைக்கப்படும் ஆசிரியர் இசுடின் இஸ்ஹாருக்கு அவர் விண்ணப்பித்தது போலவே, தற்காலிகமாக கிளாந்தானில் தங்களின் இல்லத்திற்கு அருகில் உள்ள பள்ளிக்கூடத்தில் பணிபுரிய கல்வி அமைச்சு அனுமதி அளித்துள்ளது.

அவர் பணியை மேற்கொண்டவாறே, நான்காம் நிலை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் தமது மனைவிக்கு துணையாக இருக்க முடியும் என்பதற்காக இந்தத் தற்காலிக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.

கிளந்தான் மற்றும் சரவாக் மாநில கல்வி துறை, கல்வி அமைச்சு மற்றும் செக்கு டின் உடனான பேச்சுவார்த்தை செயல்முறை சுமூகமாக நடைபெற்றதாக அவர் கூறினார்.

''ஆசிரியர் டின்னின் அலுவல்களை நாங்கள் சரியாக நிர்வகிப்போம். தற்காலிக பணியிட மாற்ற உத்தரவின் வழி, அவர் தமது மனைவியுடன் நேரத்தை செலவிட நாங்கள் வாய்ப்பளிக்கிறோம். தற்போது, அதிகம் (உதவி) தேவைப்படும் அவரின் மனைவியுடன் அவர் இருப்பதை உறுதிசெய்யும் நோக்கத்தில் இந்த பணியிட மாற்றம் வழங்கப்பட்டுள்ளது,'' என்றார் அவர்.

இன்று, பினாங்கு, சுங்கை பக்காப் தேசியப்பள்ளியில் இன்சானி மடானி மக்கள், மடானி கல்வி விழா மற்றும் திறன்பயிற்சி கல்லூரி திட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஃபட்லினா அவ்வாறு குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)