கோலாலம்பூர், 29 அக்டோபர் (பெர்னாமா) -- மென்செஸ்டர் யுனைடெட் நிர்வாகி பொறுப்பில் இருந்து எரிக் டென் ஹக் நீக்கப்பட்டுள்ளதை, அக்கிளப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பிரீமியர் லீக் ஜாம்பவான் கிளப்பான மென்செஸ்டர் யுனைடெட் இதுவரை ஒன்பது ஆட்டங்களில் விளையாடி இருக்கும் நிலையில், புள்ளிப் பட்டியலில் 14ஆவது இடத்தில் உள்ளது.
இந்தப் பருவத்தில் மோசமான தொடக்கத்தை ஏற்படுத்தியதால், அக்கிளப் இந்த முடிவை அறிவித்துள்ளது.
புதிய நிர்வாகி அறிவிக்கப்படும் வரை ரூட் வான் நிஸ்டெல்ரூய் மென்செஸ்டர் யுனைடெட்டின் இடைக்கால தலைமைப் பயிற்றுநராக அணிக்குப் பொறுப்பேற்கிறார்.
அவருக்குத் தற்போதைய பயிற்றுநர் குழு ஆதரவளிக்கும் என்று அந்தக் காற்பந்து கிளப் அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிமை நடைபெற்ற எரிக் டென் ஹக்கின் தலைமையிலான மென்ஸ்டர் யுனைடெட்டின் கடைசி ஆட்டத்தில், அக்கிளப் 2-1 என்ற கோல்களில் வெஸ்ட் ஹாம்மிடம் தோல்வி கண்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)