புது டெல்லி, 29 அக்டோபர் (பெர்னாமா) -- வெளிநாடுகளில் அதிருப்பதி வெளிப்படுத்துபவர்களைத் தடுத்து நிறுத்த முயற்சிக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கத்தின் மீது, கனடாவும் அமெரிக்காவும் கடுமையாக இருக்க வேண்டும்.
இந்தியா தலைமையிலான கொலை சதியில் பாதிக்கப்பட்ட சீக்கிய பிரிவினைவாதியான குர்பத்வந்த் சிங் பண்ணுன் பேட்டி ஒன்றில் அவ்வாறு கூறியுள்ளார்.
அமெரிக்க-கனடிய குடியுரிமையைக் கொண்டிருக்கும் குர்பத்வந்த் சிங் பண்ணுனைப் படுகொலை செய்ய முயற்சித்ததாக இந்திய நாட்டு பிரஜைகள் இருவர் மீது அமெரிக்க நீதித்துறை குற்றம் சாட்டியுள்ளது.
அவ்விருவரில் உளவுத் துறையின் முன்னாள் அதிகாரி ஒருவர் அடங்குவதாகவும் இக்கொலைக்கான திட்டத்தை அவரே தீட்டியாதாகவும் குற்றம் பதிவாகியுள்ளது.
மோடி அரசாங்கம் வெளிநாடுகளில் சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்கக்கூடாது என்றும், அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள இந்திய துணைத் தூதரகங்கள் "உளவு வலையமைப்பை" நடத்துவதாகவும் பண்ணுன் கூறுகிறார்.
எனினும், இது தொடர்பிலான எந்தவோர் ஆதாரத்தையும் அவர் முன்வைக்கவில்லை.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)